எனது நாட்குறிப்புகள்

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் -சில குறிப்புகள்

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 22, 2016

Ten Days

“உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” நுால் குறித்து நேற்று தோழர் நடராசனுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். கல்லுாரி நாட்களில் வாசித்த புத்தகம். ரஷ்யப் புரட்சியின் நுாற்றாண்டை ஒட்டி மீண்டும் வாசிக்க வேண்டிய புத்தகம். இணையத்தில் அது குறித்து விக்கிப்பீடியாவில் வாசித்த பொழுது, பல தகவல்கள் கிடைத்தன.

* 1917 அக்டோபர் புரட்சி குறித்து எழுதிய புத்தகத்தின் முதல் பதிப்பு 1919ல் வெளிவந்தது.
* ஜான் ரீடு 1920ல் மறைந்தார்.
* சோவியத்தின் முக்கிய தலைவர்கள் சமாதிகள் உள்ள கிரெம்ளினில் புதைக்கப்பட்ட மிகச் சில அமெரிக்கர்களில் ஜான் ரீடும் ஒருவர்.
* The Masses என்ற சோசலிச அரசியல் பத்திரிகைக்காக அக்டோபர் புரட்சி குறித்த நேரடி செய்தி சேகரிப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்டவர் ஜான் ரீடு.
* 1917ல் ஜான் ரீடு ரஷ்யாவிற்கு புறப்பட்ட பொழுதுதான் அக்டோபர் புரட்சியை ஆதரித்து செய்தி வெளியிடுபவர்கள், ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பவர்கள், செய்தி கொண்டு செல்பவர்கள் போன்றவர்களுக்கு அபராதம் விதித்து சிறைதண்டனை விதிப்பதற்கான எஸ்பியோனேஜ் சட்டம் இயற்றப்பட்ட ஜீன் 15, 1917 காலகட்டமாகும்.
* அமெரிக்காவிற்கு 1918களில் திரும்பிய பொழுது அவர் ரஷ்யாவில் சேகரித்த செய்தித்தாள்கள், துண்டுபிரசுரங்கள், குறிப்பெடுத்த மேடைப் பேச்சு குறிப்புகள் அனைத்தையும் அமெரிக்க அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டனர். அதன் பிறகு பல மாதங்களுக்கு அவை அவருக்கு திருப்பித் தரப்படவில்லை.
* அந்த நுாலை எழுதி முடிப்பதற்காக அமெரிக்க அரசின் விசாரணைகளுக்கும் கண்காணிப்பிற்கும் தப்பி யாருக்கும் தெரியாத இடத்தில் இரகசியமாக தங்கி குளிக்காமல், முகச்சவரம் செய்யாமல், பல நாட்கள் துாங்காமல், சரியான உணவு உட்கொள்ளாமல் இந்நுாலை எழுதி முடித்தார் ஜான் ரீடு.

johnreed
* மேக்ஸ் என்பவருக்கு இவ்வாறு எழுதினார், “மேக்ஸ், நான் எங்கிருக்கிறேன் என்பதை யாருக்கும் சொல்லாதீர்கள். நான் ரஷ்யப் புரட்சி குறித்த புத்தகத்தை எழுதி வருகிறேன். நான் ஒரு சிறிய அறை முழுவதும் முழக்க அட்டைகளையும், காகிதங்களையும், ரஷ்ய அகராதியையும் வைத்துக் கொண்டு, இரவும் பகலுமாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். நான் முப்பத்தியாறு மணி நேரங்களாக கண்களை மூடவே இல்லை. நான் இரண்டு வாரங்களில் அனைத்தையும் முடித்தாக வேண்டும். நான் அதற்கு “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என ஒரு பெயரும் வைத்துவிட்டேன். நன்றி மீண்டும் சந்திப்போம். நான் போய் ஒரு காபி அருந்த வேண்டும். கடவுள் பெயரால் இரந்து கேட்டுக் கொள்கிறேன், நான் எங்கிருக்கிறேன் என்பதை ஒருவரிடமும் சொல்லிவிடாதீர்கள்.

* 1924ல் ஸ்டாலின், ரீடு லியோன் டிராட்ஸ்கி குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்துவிட்டதாக விமர்சித்தார். அந்நுாலில் டிராட்ஸ்கி லெனினோடு சேர்ந்து இப்புரட்சியை நடத்தியவராக குறிப்பிடப்படுகிறார் ஆனால் ஸ்டாலின் குறித்து இரண்டு இடங்களில்தான் குறிப்பிடுகிறார்.
* ஸ்டாலின் காலத்தில் ஜான் ரீடின் உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் ரஷ்யாவில் தடைசெய்யப்பட்டிருந்தது. ஸ்டாலினின் மறைவிற்கு பிறகே அது மீண்டும் அனுமதிக்கப்பட்டது.
* 1999ல் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை நியுயார்க் பல்கலைக்கழகத்தின் உலகின் மிக முக்கியமான 100 இதழியல் நுால்கள் பட்டியலில் உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் நுாலை ஏழாவதாக அறிவித்தது.
* 1922ல் வெளியிடப்பட்ட போனி & லிவரைட் (நியுயார்க்) பதிப்பு முதன்முறையாக லெனினின் முன்னுரையுடன் வெளிவந்தது.
* ஜார்ஜ் ஆர்வெல் தன்னுடைய விலங்குப் பண்ணை நுாலின் “பத்திரிகையின் சுதந்திரம் (1945)” என்னும் முன்னுரையில், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட பதிப்பில் லெனினின் முன்னுரையையும், டிராட்ஸ்கி பற்றிய குறிப்பிடப்படும் இடங்களையும் நீக்கிவிட்டதாகக் குறிப்பிடுகிறார். மேலும் பிரிட்டீஷ் கம்யூனிஸ்ட் கட்சி தங்களால் முடிந்தளவிற்கு நுாலின் மூலப்பிரதியை அழித்துவிட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

– பேஸ்புக்கில்

– 26 October 2015

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: