எனது நாட்குறிப்புகள்

தலித் முதலாளித்துவமும் போலி தலித்தியமும்

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 23, 2016

ஆனந்த டெல்டும்டே இந்தத் தலைப்பில் 2011ல் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இது ஏதேனும் சிற்றிதழில் மொழிபெயர்ப்பாகியிருக்கிறதா தெரியவில்லை. பல தலித் அறிவாளிகள் உலகமயமாக்கல் தலித்களுக்கு முன்னேற்றத்தை கொண்டுவந்திருக்கிறது என்ற வாதத்தை வைப்பதற்கு மறுப்பாக இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

இதில் யாரோ வெகுசிலர் தலித்களிலிருந்து பெரிய முதலாளிகளாகவோ, வியாபாரிகளாகவோ ஆனதை வைத்து ஒட்டுமொத்த தலித்களுக்கும் உலகமயமாக்கல் சாதகமானது என்று கூறுவது தவறானதாகும். பெரும்பாலான தலித்களுக்கு உலகமயமாக்கல் மேலும் மிக மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. தொழில், அதிகாரவர்க்கம், வியாபாரம் போன்றவற்றில் உள்ளவர்கள் தலித்களில் விதிவிலக்குகள்தானே தவிர, அவர்கள் தலித்களின் முன்னேற்றத்தை அளவிடும் அளவுகோல்கள் அல்ல என்கிறார். இப்படிப்பட்ட நபர்கள் விடுதலைக்கு முன்பாகவும் வெள்ளையர்கள் ஆட்சிகாலத்திலும் இருந்திருக்கிறார்கள் என்கிறார்.

தொழிலாளர்கள் முதலாளிகளாவதோ, தலித்கள் பிராமணர்களாவதோ, ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்குபவர்களாவதோ அல்ல பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு, அவ்வாறு ஆகவும் முடியாது என்கிற எதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். அம்பேத்கர் தான் முதன் முதலாக தொழிலாளர் கட்சியை இந்தியாவில் துவங்கினார், அவர் துவங்கிய காலத்தில் கம்யூனிஸ்ட்களே காங்கிரசின் ஒரு கோஷ்டியாகத்தான் இருந்தார்கள் என்கிறார்.

மார்க்சா புத்தரா என்கிற சிறு வெளியீட்டில் அவர் சோசலிசத்தை ஏற்றுக் கொள்கிறார். அதற்கான வழிமுறை புத்தரின் வழிமுறையாகத்தான் இருக்க முடியுமே தவிர வன்முறை பாதையாக இருக்க முடியாது என்பதில்தான் முரண்படுகிறார். தொழிலாளிகள் மத்தியில் அம்பேத்கரின் உரையாடல்கள் குறித்தெல்லாம் குறிப்பிடுகிறார். இப்படியாக நீண்டு கொண்டே போகும் இது போன்ற சிறு கட்டுரைகள் அம்பேத்கர், தலித்கள், தலித்தியம், இன்றைய தலித் கோரிக்கைகள், இயக்கங்கள் குறித்த உரையாடல்களில் முக்கியமானது.

ஆங்கிலத்தில் ஆன்ந்த் டெல்டும்டேவின் கட்டுரைத் தொகுப்பொன்று இலவசமாகவே கிடைக்கிறது. கீழ்க்காணும் லிங்கில்:

https://ia902703.us.archive.org/…/AnandTeltumbdeArticles.pdf

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: