எனது நாட்குறிப்புகள்

மார்க்சியம்: கருத்துக்கள் எங்கிருந்து தோன்றுகின்றன?

Posted by ம​கேஷ் மேல் ஓகஸ்ட் 25, 2016

பேஸ்புக்கில் 27 November 2015 அன்று மேற்கண்ட தலைப்பின் கருத்தடிப்படையில் ஒரு பதிவு போட்டேன். அதனையும். அதைத் தொடர்ந்த நடந்த பின்னுாட்ட உரையாடலும்:

நண்பர் ஒருவரோடு தொடர்ந்து சில நாட்களாக உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் விக்கிபிடியாவின் ”Criticisms of Marxism” என்ற லிங்கிலிருந்து பல மேற்கோள்களை எடுத்துப் போட்டு என்னோடு விவாதிக் கொண்டிருக்கிறார். அவருடனான உரையாடல்களில் ஒரு பகுதி:
“… superstructure, as reflections of the economic base of society.
Many critics have argued that this is an oversimplification of the nature of society; they claim that the influence of ideas, culture and other aspects of what Marx called the superstructure are just as important as the economic base to the course of society, if not more so.”

மார்க்ஸ் குறிப்பிடும் மேற்கட்டுமானமாகிய கருத்துக்கள், கலாச்சாரம் மற்றும் இதர அம்சங்கள் பொருளாதார அடித்தளத்தைப் போலவே ஒரு சமூகத்திற்கு முக்கியத்துவம் உடையவை, அதைவிட எந்தவிதத்திலும் குறைந்ததோ கூடியதோ அல்ல. என்கிற இந்த வாதம் மார்க்சின் மேற்கட்டுமானம் அடிக்கட்டுமானம் என்கிற மிகமிக பரந்த வரலாற்று நோக்கிலான ஒரு பார்வையை குறுக்கிப் புரிந்து கொள்வதினால் ஏற்படும் விளைவு ஆகும். மார்க்சின் வழியில் இப்பிரச்சினையை எதிர்கொள்வதானால் நாம் கேட்க வேண்டிய கேள்விகள் அந்த கருத்துக்களும் கலாச்சாரங்களும் எங்கிருந்து உருவாகின்றன என்பதைத்தான்! நிச்சயமாக சமகால சமூக ஓட்டத்தில் அதோடு பயணித்துக் கொண்டிருக்கும் மனிதர்களாகிய நாம் நன்கு அறிவோம் கருத்துக்கள், சிந்தனைகள், கலாச்சாரம், பாராளுமன்றம், சட்டமன்றம், நீதித்துறை, கல்வி, ஊடகங்கள் போன்றவை ஒரு சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை. சார்லஸ் டிக்கன்சின் நாவல்கள் எவ்வாறு இங்கிலாந்தின் குழந்தைத் தொழிலாளர் உழைப்பு முறைக்கு எதிராக தீர்மானகரமான தாக்கங்களை கொண்டு வந்தது என நமக்குத் தெரியும். தொழிலாளர் போராட்டங்களும், தொழிற்சாலை ஆய்வுக்குழுக்களின் அறிக்கைகளும் எவ்வாறு தொழிலாளர் நலச் சட்டங்களை கொண்டு வந்தது என நமக்குத் தெரியும். ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது, அது சார்லஸ் டிக்கன்ஸ் போன்றவர்களும், தொழிலாளர்களும், நவீன கால அறிஞர்களும், ஆய்வாளர்களும் எப்பொழுது தோன்றுகிறார்கள்? ஏன் 18 மற்றும் 19ம் நுாற்றாண்டுகளில் தோன்றினார்கள்? ஏன் அவர்கள் அத்தகைய பிரச்சினைகளுக்கு எதிராக எழுதவும் போராடவும் செய்தார்கள் என்பனவற்றை. இவற்றை புரிந்து கொள்வதற்கு நாம் நம் சமகாலத்தில் இருந்து விசயங்களை பார்ப்பதால் மட்டும் சாத்தியமாகாது. இதற்கு நமக்கு நம் கடந்த காலத்தையும், அதன் வாழ்க்கைமுறையையும், அங்கு நிலவிய கருத்துக்களையும், அங்கு பேசப்பட்ட பிரச்சினைகளையும், அங்கு நடைபெற்ற போராட்டங்களையும், அனைத்தையும் இணைத்து வரலாற்றை அதன் முழுமையில் புரிந்து கொள்ளும் பார்வையை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அங்குதான் பொருளாதாரம் என்று சொல்லக்கூடிய உற்பத்தி மற்றும் மறுஉற்பத்தி நிகழ்முறை வகிக்கும் தீர்மானகரமான பாத்திரத்தை புரிந்து கொள்ள முடியும். இந்தச் சிந்தனைகளையும், கருத்துக்களையும், புதிய நிறுவன முறைகளையும், சமூக அமைப்பு வடிவங்களையும் கொண்டுவருவது மாறும் புதிய உற்பத்தி மற்றும் மறுஉற்பத்தி நிகழ்முறைதான் என்பதை. ஒரு காலகட்டத்தில் நிலவும் மனிதனின் எல்லாச் சிந்தனைகளும், எல்லா கருத்துக்களும், எல்லா விருப்பங்களும் நிறைவேறுவதில்லை. எல்லா எழுத்துக்களும், ஆய்வுகளும் புதிய சட்டங்களை புதிய மாற்றங்களை கொண்டு வந்துவிடவில்லை. இவற்றிற்கான காரணங்களை ஆராயும் பொழுது. அதற்கான காரணங்களை இந்த நிகழ்முறையின் உள்ளேயே தேடும் நோக்கம் உள்ள போதும் மட்டுமே பொருளாதார அடிக்கட்டுமானத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ள முடியும்.

ஈஸ்வரன் அ.கா. அருமை தோழர்.

//ஏன் 18 மற்றும் 19ம் நுாற்றாண்டுகளில் தோன்றினார்கள்? // இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட இப் பிரச்சினைகள், அன்றைய பொளாதார அடித்தளத்தின் பிரதிபலிப்பே (மேற்கட்டுமானமே) என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மார்க்ஸ் – எங்கெல்ஸ்:-
“மனிதனினுடைய பொருளாயத வாழ்வின் நிலைமைகளிலும், அவனுடைய சமூக உறவுகளிலும், அவனுடைய சமூக வாழ்விலும் ஒவ்வொரு மாற்றம் ஏற்படும்போதும், மனிதனுடைய எண்ணங்களும், கண்ணோட்டங்களும், கருத்துருவாக்கங்களும், சுருங்கக் கூறின், மனிதனுடைய உணர்வும் மாற்றம் அடைகிறது என்பதைப். புரிந்து கொள்ள ஆழ்ந்த ஞானம் தேவையா, என்ன?

பொருள் உற்பத்தியில் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுகிறதோ அந்த அளவுக்கு அறிவுத்துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது என்பதைத் தவிர கருத்துகளின் வரலாறு வேறு எதை நிரூபிக்கிறது?”
அத்தியாயம்-2
கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை

ஈஸ்வரன் அ.கா. துணைத் தளபதி மார்கோஸ் @//முன்னறிவிக்கப்பட்ட முடிவல்லவா?// இதற்கு நான் கொடுத்த உதாரணம் பொருத்தமானதே.

ஈஸ்வரன் அ.கா. எதையும் ஒரு அணுகுமுறையில் அல்லாமல் அணுகப்படுவதில்லை.

வரலாற்று முறைமையியல் (historical methodology) என்பது வரலாறு பற்றிய அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறை பல இருக்கின்றன.

மார்க்சியத்தின் வரலாறு பற்றிய அணுகுமுறை என்பது வரலாற்றியல் பொருள்முதல்வாதமாகும்.

Magesh Ramanathan மார்க்சிய அடிப்படை நுால்களை சோந்தமாக ஓரளவுக்கேனும் முழுமையாக படிக்காதவர்களுக்கு நிச்சயம் என்னுடைய சிறு விளக்கம் முழுமையானதாகாது. இன்னும் விரிவாக எழுதவோ உரையாடவோ வேண்டிய விசயமே. ஆனால் சொந்தமாக புரிந்து கொள்ளும் முயற்சியும் வாசிப்பும் இல்லாமல் நிச்சயமாக இது முழுமையடையாது. ஆனால் எனக்கு இதில் நான் குறிப்பிட்டுள்ள இரண்டு மூன்று அம்சங்கள் இது தொடர்பாக இணையத்தில் நடக்கும விவாதங்களில் முக்கியம் எனப் பட்டதால் பகிர்ந்தேன்.

Magesh Ramanathan 1. மார்க்சின் மேற்கட்டுமானம் அடிக்கட்டுமானம் என்கிற மிகமிக பரந்த வரலாற்று நோக்கிலான ஒரு பார்வையை குறுக்கிப் புரிந்து கொள்வதினால் ஏற்படும் விளைவு ஆகும்.

Bharathi Nathan துணைத் தளபதி மார்கோஸ் அவர்களே மார்க்சியம் ஒரு பிரச்னையை ஆராய இயக்கவியல் என்ற கண்ணோட்டத்தை தருகிறது. அந்த இயக்கவியல் என்பது இயற்கை விஞ்ஞானத்தையும், சமூக விஞ்ஞானத்தையும் விளக்குகின்ற வழிமுறை. வெகு சுலபமாய் தோழர் அகா ஈஸ்வரன் செடி உதாரணத்தை கூறி விட்டார் என்ற எண்ணத்தில் நீங்கள் அதைப் பார்ப்பதாக நினைக்கிறேன். அப்படியல்ல, பொருளுக்குள் இருக்கும் இயக்கத்தை சுட்டவே அவர் அப்படிக் கூறினார். செடி கொடி உதாரணத்தை வரலாற்றுச் சிக்கலோடு தொடர்புப் படுத்த முடியுமா? என்று கேட்கிறீர்கள். இயற்கை விஞ்ஞானத்தைப் பற்றிய ஆய்வு முறையை சமூகத்தோடு பொருத்திப் பார்ப்பதே மார்க்சியம். கவனமாக கேளுங்கள் ஆய்வு முறை என்பதே.

Magesh Ramanathan 2. சார்லஸ் டிக்கன்ஸ் போன்றவர்களும், தொழிலாளர்களும், நவீன கால அறிஞர்களும், ஆய்வாளர்களும் எப்பொழுது தோன்றுகிறார்கள்? ஏன் 18 மற்றும் 19ம் நுாற்றாண்டுகளில் தோன்றினார்கள்? ஏன் அவர்கள் அத்தகைய பிரச்சினைகளுக்கு எதிராக எழுதவும் போராடவும் செய்தார்கள் என்பனவற்றை. இவற்றை புரிந்து கொள்வதற்கு நாம் நம் சமகாலத்தில் இருந்து விசயங்களை பார்ப்பதால் மட்டும் சாத்தியமாகாது. இதற்கு நமக்கு நம் கடந்த காலத்தையும், அதன் வாழ்க்கைமுறையையும், அங்கு நிலவிய கருத்துக்களையும், அங்கு பேசப்பட்ட பிரச்சினைகளையும், அங்கு நடைபெற்ற போராட்டங்களையும், அனைத்தையும் இணைத்து வரலாற்றை அதன் முழுமையில் புரிந்து கொள்ளும் பார்வையை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
Magesh Ramanathan 3. அதற்கான காரணங்களை இந்த நிகழ்முறையின் உள்ளேயே தேடும் நோக்கம் உள்ள போதும் மட்டுமே பொருளாதார அடிக்கட்டுமானத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ள முடியும்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: