எனது நாட்குறிப்புகள்

உறைந்த உதடுகள்

Posted by ம​கேஷ் மேல் ஜூலை 9, 2018

அது பத்தொன்பதாம் நுாற்றாண்டின்
இறுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

அதில் ஒரு பெண்
பழுப்பு நிற
முழு நீள ஸ்கர்ட்டும்
காலரில்லாமல்
கஃப் வைத்த முழுநீள கையுடன்
வெள்ளை நிற மேல்சட்டையும்
அணிந்து அமர்ந்திருந்தாள்.

அருகில் ஒரு ஆண்
வொய்டு நாட்ச்
கோர்ட் சூட்டில்
அவள் அமர்ந்திருந்த
நாற்காலி மீது
இடது புறங்கையை வைத்தவாறு
ஒரு பக்கமாக
நின்று கொண்டிருந்தான்.

ஆணின் முகம்
வசீகரமாக இருந்தது.
அந்தக் கண்களில்
ஒரு தீட்சண்யம் தெரிந்தது.

பெண்ணின் முகம்
நெட்டையான மெலிந்த உடலுக்குச்
சற்றும் பொருத்தமில்லாமல்
பரந்த நெற்றியுடனும்
பருத்த மூக்குடனும்
ஒடுங்கிய கண்களுடனும்
பெரிதாய் இருந்தது.

“ஆணுக்கு பெண் வேடம்
போட்டதைப் போல இருப்பதாக”
முனுமுனுத்தேன்.
அவள் காதுகளில்
விழுந்திருக்கும் போல்
அவனிடம் கூறினாள்
“இதற்குத்தான் சொன்னேன்
நான் புகைப்படம்
எடுத்துக் கொள்ள வரவில்லையென”
அந்த கடைசிச் சொல்லுடன்
இன்றும்
அந்த உதடுகள்
வரலாற்றில்
உறைந்து நிற்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: