எனது நாட்குறிப்புகள்

மனித இனங்கள் நூல் குறித்து.

Posted by ம​கேஷ் மேல் மே 22, 2019

இன்று அண்ணாநகரில் ஒரு மருத்துவ மனையில் நோயாளிகள் காத்திருக்கும் பொழுது வாசிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த நூல்களில் ஒன்று, 1960களில் வெளிவந்த இனங்கள் குறித்த சிறந்த முன்னேற்றப் பதிப்பகத்தின் ஆங்கில நூல்.

இதன் தமிழ் மொழி பெயர்ப்புதான் உள்ளது. ஆங்கிலத்தில் படிக்க எளிமையாகவும், தெளிவாகவும் இருந்தது.

காத்திருக்கும் போதே கிட்டத்தட்ட பாதி நூலை வாசித்துவிட்டேன்.

மரபினத்திற்கும் இனவாதக் கோட்பாட்டிற்கும் இடையிலான வித்தியாசத்தை வலியுறுத்துகிறது இந்த நூல். கறுப்பினம், ஐரோப்பிய இனம், மங்கோலிய இனம் என மூன்று பெரும் பிரிவுகளாகவும், அதற்குள் பல்வேறு உப்பிரிவுகளாகவும் சோவியத் யூனியனின் மரபின ஆய்வாளர்கள் வரையறுக்கிறார்களாம்.

இனங்கள் பலவாக இருந்தாலும் அவை அனைத்திற்கும் பொது மூதாதையர்தான் இருந்துள்ளனர் என்கிறது இந்தநூல். வாழும் இயற்கை சூழலும், சமூக பொருளாதார காரணங்களும்தான் இந்த மூன்று பிரதான இனங்களுக்கும் அதன் உட்பிரிவுகளுக்கும் காரணம் என்கிறது.

மற்றபடி பரிணாமரீதியான எந்த வித்தியாசங்களும் இவற்றிற்கு இடையே கிடையாது என்கிறார்கள்.

இதில் கவனத்தை ஈர்த்த மற்றொரு வித்தியாசம். நியான்டர்தால் மனிதர்கள்தான் இந்த அனைத்து இனங்களுக்கும் பொதுவான மூதாதையர்கள் என்கிறார்கள். ஆனால் இதுவரை படித்தவற்றில் நியான்டர்தால்கள் மனிதர்களின் மூதாதையர்கள் இல்லை. ஹோமோசேபியன்ஸ் என படித்திருக்கிறோம்.

அறிவியலின் பல்வேறு துறைகளில், ஆய்வுமுறைகளில், ஆராய்ச்சி முடிவுகளில், அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனிற்கும் வித்தியாசங்கள் உள்ளன. நாம் பெரும்பாலும் அமெரிக்க அடிப்படைகளிலான புரிதல்கள் உள்ளவர்கள். மேலும் இவை குறித்து வாசித்து பார்க்க வேண்டும்.

மனித இனத்தின் தோற்றம் பரவல் குறித்து நவீன காலங்களில், நவீன ஆய்வுமுறைகளின் துணை கொண்டு நிறைய புதிய கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. டின்ஏ ஆராய்ச்சிகள், மரபினக்கூறுகள் பகுப்பாய்வு ஆகியவை வளர்ந்துள்ளன. இவையெல்லாம் 18 19 ஏன் 20ம் நூற்றாண்டு துவக்கங்களில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது. ஆகவே புறநிலை ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் ஆகிவற்றை கவனமாக படித்து அதனை விளங்கிக் கொள்வதில் கோட்பாடுகளின் பயனையும், கோட்பாடுகளை விளங்கிக் கொள்வதில் அவற்றின் பயன்களையும் குறித்து விரிவாக பேச வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: