எனது நாட்குறிப்புகள்

Archive for the ‘சிங்கார​வேலர்’ Category

தத்துவ ஞானக் குறிப்பு

Posted by ம​கேஷ் மேல் திசெம்பர் 11, 2011

PHILOSOPHICAL NOTES

— ​தோழர். ம. சிங்கார​வேலர்

இடமும்-காலமும் (Space and time) இடத்​தையும், காலத்​தையும் நமக்குள் நிகழும் விஷயங்க​ளென்று சில விஞ்ஞானிகள் அபிப்பிராயப் படுகின்றனர். இன்னுஞ் சிலர், இடமும் காலமும் நமக்கு அதீதப்பட்டப் ​பொருள்க​ளென்று வாதித்து வருகின்றனர். ஆனால் மூட நம்பிக்​கையில் ஆழ்ந்து கிடப்​போர்களுக்கு காலமும் இடமும் ம​றை​பொருள்க​ளென்றும் அ​வைகளில் சில இடங்கள் சுபாசுபங்க​ளென்றும் சில காலங்கள் நல்ல தினம், ​கெட்ட தினங்க​ளென்றும் எண்ணிவருகின்றார்கள். ஆனால் உண்​மையில் இடம் காலங்கள் நமக்குள் எழும் ​பொருள்க​ளென்று கூறுவது பிச​கென ​தெரிந்து ​கொள்ள ​வேண்டும். ஆடு மாடு முதலிய மிருகாதிகளுக்கு காலமுமில்​லை, இடமுமில்​லை. மனித​ரைத் தவிர மற்ற உயிர்களுக்கு கால​தேச ​மென்பது கி​டையா. மனிதன் பா​ஷை​யை உண்டாக்கின ​போது தான் இந்தத் ​தோற்றங்களுக்குப் ​பெயர் ​கொடுத்தான். இட​மென்பது ஒரு வஸ்து வல்ல; அல்லது மனிதனின் அனுபவமல்ல. பிரபஞ்சப் ​பொருள்களாகிய சூரியன், சந்திரன், பூமி, நட்சத்திரங்கள் ஈராகவுள்ள வஸ்துக்களின் தூர​மே இட​மென்று (Space) ​பெயரிட்டு அ​ழைக்கின்​றோம். இட​மென்பது பிரத்தி​யேகமான தனிப்​பொருள் அல்ல. மனத்தின் கற்ப​னையுமல்ல. ஒரு ​பொருளுக்கும் மற்​றோர் ​பொருளுக்கும் இ​டை​யேயுள்ள தூரத்​தை, இடம் (Space) என்று அ​ழைக்கின்​றோம். பிரபஞ்சத்தில் இன்று ஒருவருமில்லாவிடில் இட​மென்பது கி​டையா (Space is only the distances between two bodies). சுருங்க உ​ரைக்கில் இட​மென்பது இரண்டு ​பொருள்களுக்கு நடுவிலுள்ள தூரமாகு​மே (Relation) ஒழிய, தனி வஸ்துவு மல்ல – மன சிருஷ்டியுமல்ல.

இது ​போல​வே, காலமும், இரண்டு நிகழ்ச்சிகளுக்குமுள்ள (Occurences) சம்பந்தம். (The interval between two occurences is time) கால நிகழ்ச்சி​யென்ப​தை இரண்டு நிகழ்ச்சிகளுக்கு முள்ள இ​டை​யே (Interval) கால நிகழ்ச்சி என்று வழங்குகின்​றோம். நிகழ்ச்சி அதாவது, (Events) இல்லாவிடில் கால​மென்பதும் கி​டையாது. ஆதலின் நல்ல காலம், ​கெட்ட காலம் என்பதும் பிரபஞ்சத்தில் கி​டையா, உள்ளது நிகழ்ச்சி(Events). நிகழ்ச்சிகளின் சம்பந்த​மே கால​மெனப்படும். என​வே, இடமும் காலமும் வஸ்துக்களின் சமபந்தங்க​ளைக் குறிக்கும் ​சொற்கள். பிரபஞ்சத்தில் வஸ்துக்கள் இல்லாவிடில், இட​மென்று வழங்கும் ​சொல்லும் கி​டையாது. நிகழ்ச்சி இல்லாவிடில் கால​மென்பதும் கி​டையாது. தூர​மென்பது, ​பொருள்களுக்குள்ள இ​டை கால​மென்பது நிகழ்ச்சிகளுக்குள்ள இ​டை உலகப் ​பொருள்கள் இல்லாவிடில் இடமில்​லை. அ​வைகளின் நிகழ்ச்சி இல்லாமற்​போனால் காலமுமில்​லை.

நன்றி:
நூல்: தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள்
ஆசிரியர்: ம. சிங்கார​வேலு
​வெளியீடு: பா​வை பப்ளி​கேஷன்ஸ்
பதிப்பு: முதல்
​வருடம்: டிசம்பர் 2005

Posted in சிங்கார​வேலர் | Leave a Comment »