எனது நாட்குறிப்புகள்

ந.முத்துமோகனின் நேர்காணலிலிருந்து – உ​ரையாடலுக்கான ஒரு புள்ளி

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 5, 2013

​சோசலிசச் சந்​தை

ரஷ்யக் கல்வியியல் முற்றிலும் மாறுபட்டது…” என்ற த​லைப்பில் 20 பிப்ரவரி 2013 ​அன்று கீற்று இ​ணையதளத்தில் பேராசிரியர் ந.முத்துமோகனின் நேர்காணல் ஒன்று ​வெளியாகியிருந்தது. ​சோவியத் யூனியன் பற்றிய அவரு​டைய அனுபவங்க​ளை பகிர்ந்து ​கொள்ளும் அந்த ​நேர்காணலில், ‘​சோசலிசச் சந்​தை’ என்பது குறித்து கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“சமீபத்தில் சீனக் கம்யூனிஸ்ட் அறிஞர் ஒருவரின் கட்டுரை ஒன்றைப் படித்தேன்.  சந்தை என்ற விஷயமே முதலாளியத்துக்குச் சொந்தமானது என நாம் கருதிக் கொண்டிருக்கிறோம், ஆனால் சோசலிச உற்பத்தி என்பது உள்ளது போலவே சோசலிசச் சந்தை என்ற ஒன்றும் உண்டு.  சோசலிசச் சந்தை பற்றிய புரிதல் இன்றி அதனை சோசலிசப் பகிர்வு எனப் பொதுவாகப் புரிந்துகொண்டதால், அந்தப் பகிர்வை நிர்வகிப்பது அரசு அல்லது கட்சி என முடித்துவிட்டதால், அரசு சார்ந்த அதிகார மையம் வலுப்பட்டுவிட்டது, உற்பத்தியாளர்களின் மற்றும் நுகர்வாளர்களின் இடம் மறுக்கப்பட்டு விட்டது என்று எழுதுகிறார்.  சோசலிச சந்தை எப்படிப்பட்டது? அதன் பண்புகள் யாவை? அது சோசலிசச் சந்தையாகத் தொடர்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? சோசலிசச் சந்தையில் உற்பத்தியாளர், நுகர்வாளரின் பங்கு என்ன? என்ற விஷயங்களைப் பற்றி நாம் யோசிக்கத் தவறி விட்டோம் என்று அக்கட்டுரை பேசுகிறது.  சோசலிச சந்தைச் சக்திகள் பற்றிய அங்கீகாரம் இல்லாத சூழல்களில் அவை தன்னிச்சையாகச் செயல்பட முனையும்போது அவை எதிர்ப்புரட்சி சக்திகளாக நம் கண்ணில்படும்.  இப்படித்தான் சோசலிசத்திற்குள் சந்தை என்ற ஒன்று தோன்றிவிட்ட சூழலை எதிர் மறையாகப் பார்க்கத் தொடங்கினோம்.

இந்த எதிர்மறை உணர்வு அது குறித்து நம்மைச் சிந்திக்க விடாமல் செய்துவிட்டது என்று எழுதுகிறார்.”

​மேற்​ச்சொன்ன சிந்த​னை முன்​வைக்கப்படுவதற்கான காரணமாக கட்டு​ரையில் கீழ்க்கண்டவாறு ​சோவியத் யூனியன் அனுபவம் விளக்கப்படுகிறது:

“மேற்கு நாடுகளைப் பற்றிய அரசியல் ரீதியான மதிப்பீடுகளைச் சுமந்து வரும் பத்திரிகைச் செய்திகள் ஒருபுறமிருக்க, ஜீன்ஸ், டீ ஷர்ட், கொக்ககோலா, ஃபான்டா, மேற்கத்திய இசை அல்லது திரைப்படம் போன்ற மேற்கத்தியச் சரக்குகள் மீது மக்களிடையில் பரவலான மோகம் தென்பட்டது.  அவை எங்காவது ஒரு கடையில் அல்லது மெட்ரோ ஸ்டேஷன் வாசலில் விற்கப்படுகின்றன எனில் நீண்ட கியூவில் மக்கள் உடனடியாகக் குவிந்துவிடுவார்கள்.  சோவியத் சூப்பர் மார்க்கெட்டுகளில் மற்றும் கடைகளில் ஒரேவிதமான நுகர்வுப் பொருட்கள் ஒரே விதமான பேப்பர்களில் அல்லது பாக்கெட்டுகளில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும்.  ஆனால் ஒருவர் ஆர்வத்தோடு அவற்றில் ஏதோ ஒன்றைத் தேர்வு செய்து எடுத்தார் என்று சொல்லக்கூடிய வகையில் பலவகைப் (Variety) பொருட்கள் அங்கே இருக்காது.  தேர்வுகளுக்கான வாய்ப்பு மிகக் குறைவானதாகவே இருக்கும்.

மக்களிடையில்  தென்பட்ட மந்தகதி குடிப்பழக்கம், குடும்பங்களின் உடைவு, குழந்தைகள் புறக்கணிக்கப் படுவது, பொதுப் பிரச்சினைகளில் அக்கறையின்மை ஆகியவற்றில் அதிகமாக வெளிப்பட்டது.  அந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கட்சி அதிகமாகப் பேசியது.  ஆனால், அந்தப் பேச்சுக்கள் மேலோட்டமாக இருந்தனவே தவிர அடிப்படையாகப் பிரச்சினையை அணுகித் தொட்டதாகத் தெரியவில்லை.  கிராமப்புறங்களுக்கு நாங்கள் பயணம் செய்திருக்கிறோம்.  மல்தாவியாவில் திராட்சை, மற்றும் ஆப்பிள் தோட்டங்களில் பழங்கள் பறிக்கும் வேலைகளைச் செய்ய கோடை விடுமுறையில் மாணவர்கள் செல்லுவார்கள்.  வருடத்தில் 40 நாட்கள் உக்ரைன், பேலோ ருஷ்யாவின் சிறுநகரங்களில் ரசாயன தொழிற் சாலையில் தொழிற்பயிற்சிக்காகச் சென்றிருக் கிறேன்.  கிராமப் புறங்களில் நான் மேலே சொன்ன மந்தகதியும் அக்கறையின்மையும் அதிகமாகத் தென்படும்.  மதுப்பழக்கம், குடும்பங்களின் சிதைவு ஆகியவற்றையும் அங்கு அதிகம் சந்திக்க வேண்டி வரும்.  கிராமங்களின் பாதிப்பில் நகரங்களைப் பேணுகிறார்களோ என்ற தோற்றம் ஏற்பட்டதுண்டு.அந்தச் சமயத்தில் எங்களிடையில் நடந்த சில விவாதங்களை நினைவுக்குக் கொண்டு வருகிறேன்.

மிகப் பெரிய ஒரு சோசலிசப் புரட்சியை நடத்திய இந்த மக்களை, இரண்டாம் உலகப் போரில் மிகப் பெரிய தியாகங்கள் செய்த இந்த மக்களைக் காலுக்குள் கிடக்கும் கந்தல் துணி போன்ற ஜீன்ஸ்களுக்காக இப்படி கியூவில் நிற்கவைத்துவிட்டார்களே என்று அந்த நாட்களில் பேசியதுண்டு.”

​சோவியத் யூனியன் அனுபவத்தின் வாயிலாக இரண்டு விசயங்கள் முன்​வைக்கப்படுகின்றன. ஒன்று, மக்க​ளை ஈர்க்கும் விதத்திலான வடிவங்களில் ஒரு ​பொருளுக்கான பல்​வேறு பிராண்ட்கள் விற்ப​னைக்கு கி​டைப்பதில்​லை. ​தேர்வு ​செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்​லை. சாரமாக கூறுவ​தென்றால் முதலாளித்துவத்தில் உள்ள இந்த அம்சத்திற்கு ​சோசலிசத்தில் மாற்று இல்​லை. இரண்டாவது, முதலாளித்துவத்திற்கு மாற்றான வாழ்க்​கையில் ஒரு விறுவிறுப்பு இல்​லை. வாழ்க்​கை மந்த கதியில் ​வெறுப்பும் சலிப்பும் நி​றைந்ததாக இருக்கிறது.

இவற்​றை எதிர்​கொள்வதற்கான மாற்றாக​வே இங்​கே ‘​சோசலிசச் சந்​தை’ என்கிற பதமும், அரசியலும், ​கோட்பாடும், வாழ்க்​கைமு​றையும், தத்துவமும் முன் ​வைக்கப்படுகிறது.

சுரண்டல் சமூக அ​மைப்புகள் வ​ரை மனிதர்கள் உணவு, உ​டை மற்றும் இருப்பிடத்திற்கான ​பெரும் உ​ழைப்பு மற்றும் ​போராட்டங்களி​லே​யே வாழ்​வை ​செலவழிக்கிறார்கள். ஆக​வே தான் அ​வை பற்றிய ​பெரும் கனவுகளும், ஏக்கங்களும், அவற்​றை விதவிதமாக அனுபவிக்க ​வேண்டும் என்ற விருப்பங்கள் அவர்க​ளை ஆட்டிப்ப​டைக்கிறது. அந்த ஆர்வங்க​ளை சந்​தைப்படுத்திக் ​கொள்வதுதான் முதலாளித்துவ சந்​தை ​செயல்பாட்டிற்கான அடிப்ப​டையாக அ​மைகிறது.

சந்​தைக்கான உற்பத்தி மு​றையிலிருந்து ​தே​வைக்கான உற்பத்தி மு​றைக்கு மாறுவதுதான் ​சோசலிசம் என்ற அடிப்ப​டை கருத்​தே சந்​தை என்கிற விசயத்​தை முற்றிலும் மறுத்​தொதுக்கக் கூடியதாகத்தான் புரிந்து ​கொள்ள முடிகிறது.

மனிதகுலம் இந்த அடிப்ப​டைத் ​தே​வைகளுக்கான ​போராட்டத்திலிருந்து விடுபடும் ​பொழுது, அவர்களுக்கான உண்​மையான பிற சவால்கள் முன் ​வைக்கப்பட ​வேண்டியுள்ளது. ​​சோசலிசப் புரட்சிக்குப் பிறகு ​சோசலிச உற்பத்திமு​றை கட்ட​மைக்கப்பட ​வேண்டியிருக்கிறது. அதற்கான அரசியல், சமூக அ​மைப்பு மு​றைகள் வளர்க்கப்பட ​வேண்டியிருக்கிறது. அதிகாரம் முழுவதும் உ​ழைக்கும் மக்கள் மயமாக்கப்பட ​வேண்டியிருக்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயக வரம்புகள் உ​டைத்தழிக்கப்படவும், முழு​மையான மக்கள் ஜனநாயகம் கட்ட​மைக்கப்படவும் ​வேண்டியிருக்கிறது. மக்களின் சமூக அரசியல் கட​மைகள் முழு​மையாக ந​டைமு​றைப்படுத்தப்பட்டு, அ​வை கட்டாயமானதாக, வாழ்க்​கை விதியாக மாற்றம் காண ​வேண்டியிருக்கிறது. பிற சமூக மக்களின் விடுத​லைக்காக ​போராட ​வேண்டிய கட​மைகள் அவர்களால் முன்​னெடுக்கப்பட ​வேண்டியிருக்கிறது. கலாச்சாரம், விஞ்ஞானம் ​​போன்ற து​றைகளில் பல புதிய சவால்கள் மக்கள் முன்பு ​வைக்கப்பட்டு திட்டமிட்ட மு​றைகளில் ஒவ்​வொரு து​றையிலும் முதலாளித்துவத்தின் ​நோக்கங்களுக்கு ​நேர்எதிரான தி​சைவழிகளில் வளர்ச்சி காணப்பட ​வேண்டியுள்ளது. இ​வை அ​னைத்தும் குறித்த தீவிரமான விவாதங்களும், ஆய்வுகளும், ப​டைப்புகளும் நாடு முழுவதும் முன்​னெடுக்கப்பட ​வேண்டியிருக்கிறது.

ஆனால் முதலாளித்துவத்தில் நிலவிய அடிப்ப​டைத் ​தே​வைக்கான பரபரப்புகள் கு​றைந்தவுடன், புதிய முன்​பை விட வளர்ச்சிய​டைந்த தனி மனித ​தே​வைகளுக்கு மாற்றான சமுகத் ​தே​வைகளுக்கான பிடிப்பு, ​தேடல், மற்றும் ​போராட்டங்களால் அவ்விடம் நிரப்பப்பட ​வேண்டியுள்ளது. இத்த​கைய நிகழ்ச்சிநிரல்கள் இல்லாத சமூகங்கள் ​தேய்ந்து ஒளிகுன்றி ம​றைந்தழிவது தவிர்க்க முடியாதன​வே.

.... இங்கே பதியப்பட்டது விமர்சனம் | Leave a Comment »

“​கைதிகள்” – ​ஜெய​மோகன்

Posted by ம​கேஷ் மேல் மார்ச் 4, 2013

முன்பு ​​ஜெய​​மோகனின் சிறுக​தைக​ளை அவரு​டைய பக்கத்தில் படித்துக் ​கொண்டிருந்​தேன். சில சிறுக​தைக​ளைப் பற்றி விமர்சனமும் என்னு​டைய வ​லைப்பூவில் எழுதி​னேன். அவரு​டைய எழுத்தாற்ற​லைவிட விஞ்சியிருக்கும் அவரு​டைய அரசியல் மற்றும் கருத்தியல் அபிலா​ஷைகள் என்​னை மிகவும் ​ ​சோர்வ​டைய ​வைத்தன. அவற்​றை பற்றி எழுதுவதால் ​பெரிய பய​னொன்றும் வி​ளையப்​போவதில்​லை என படிப்ப​தை விட்டுவிட்​டேன். தற்​பொழுது ​கைதிகள் சிறுக​தை​யை ​தோழர் ஒருவர் ​கேட்டுக் ​கொண்டதற்கிணங்க படித்​தேன்.

​தோழர் க​தை​யை பரிந்து​ரைக்கும் ​பொழு​தே, “எல். அப்பு படு​கொ​லை பற்றி ​கைதிகள் என்​றொரு சிறுக​தை எழுதியிருக்கிறார், படித்துவிட்டு உங்கள் கருத்​தைக் கூறுங்கள்” என கூறிவிட்டதால், நக்சல்பாரிகள், மா​வோயிஸ்ட்கள் ​போன்றவர்கள் மீது கண்மூடித்தனமான கசப்பு நி​றைந்த எதிர்நி​லை ​கொண்டவரின் எழுத்​தை வாசிக்கி​றோம் என்ற அதீத கவனத்துடன் வாசித்​தேன்.

க​தை ​கொ​லையாளிகளின் பார்​வையிலிருந்து ஒரு ​போலி தாக்குதல் படு​கொ​லை நிகழ்வு விவரிக்கப்படுகிறது. ​நேரடியாக​வே இது வரலாற்று நிகழ்வு ஒன்​றைப் பற்றி ​பேசுவதால், சில உண்​மைத் தகவல்க​ளை பயன்படுத்தியுள்ளார். அப்பு ​கொ​லை​யை அர​சோ காவல்து​றை​யோ அது ஒரு ​திட்டமிட்ட ​போலி படு​கொ​லைதான் என பகிரங்கமாக ஏற்றுக் ​கொண்டுள்ளதா ​தெரியவில்​லை. இது ஒரு பு​னைவுதா​னே என்கிற சாதகத்​தை எழுத்தாளர் தனக்கான பாதுகாப்பாக பு​ணைந்து ​கொள்கிறார் ​போலும்.

அப்பு ​கொ​லை விவகாரத்தில் சிறுக​தை ​வெளிப்படுத்தும் வரலாற்றுத் தகவல்கள்
1. ந​கை திருட்டு வழக்​கொன்றின் அடிப்ப​டையில் அப்பு​வை காவல்து​றை ​தேடிவந்தது.
2. அப்பு ​வே​லை ​செய்த பகுதி மக்க​ளை சித்திரவ​தை ​செய்ததன் மூலமாக அப்பு​வை சரண​டைய ​வைத்தது.
3. ​வே​றெங்​கோ காவல்நி​​லையத்தில் சரண​டைந்தவ​ரை தர்மபுரி காட்டிற்குள் ​வைத்து காவல்து​றை சுட்டுக் ​கொன்று உட​லை பு​தைத்தது.
4. அப்புவின் உருவம் இளம் கல்லூரி மாணவனின் உருவத்​தைப் ​போலிருந்தது. அரும்பு மீ​சையும், ஒல்லியான கருத்த ​தேகமுமாக இருந்தார்.

இது ​போன்ற வரலாற்றுத் தகவல்கள் துல்லியமான​வையா அல்லது க​தைக்காக சற்று மாற்றம் ​செய்யப்பட்டதா ​தெரியவில்​லை. நான் ​கேள்விப்பட்ட வ​ரை எல். அப்பு சிபிஎம்மிலிருந்து சிபிஐ எம்எல்லிற்கு வந்தவர். சிமிஎம்மில் இருக்கும் ​பொழுது ​கோ​வை ஈஸ்வரன் உள்ளிட்டவர்க​ளோடு ​சேர்ந்து தீக்கதிர் பத்திரி​கை​யை துவங்கியவர்களுள் ஒருவர். ​சிபிஐ-எம்எல்லின் தமிழ் மாநில ​செயலாளர். கோ​வையில் லாரி ஓட்டுனராக இருந்தவர். அவருக்கு து​னைவியார் மற்றும் குழந்​தைகள் இருந்துள்ளனர். ஆனால் சிறுக​தையில் அவர் கல்லூரி மாணவனின் உருவத்​தோடு, அரும்பு மீ​சை உள்ளவராக சித்தரிக்கப்படுகிறார். ஒரு ​வே​ளை பு​னைவாக்கும் முயற்சியாக இருக்கலாம். க​தை உண்​மை​யைப் ​போல இருக்க​வேண்டும், உண்​மையாக இருக்க ​வேண்டும் என்ற கட்டாயம் இல்​லை என்றாலும், “அப்பு” என்ற ​பெயர் பயன்படுத்தல் இ​தை​யெல்லாம் ​யோசிக்க​வே தூண்டுகிறது.

தருமபுரி காட்​டையும், அதன் தன்​மை​யையும் தனக்​கேயுரிய பாணியில் வருணிக்கிறார். 80களின் காலகட்டத்​தை க​தைக்குத் தருவதற்காக அன்​றைய புழக்கத்தில் இருந்த ​பொருட்க​ளை குறிப்பிடுகிறார். இவற்றின் மூலமாக​வெல்லாம் ஒரு ப​டைப்பிற்குரிய தன்​மை​யை ஒரு வரலாற்றுச் சம்பவத்​தை, கருத்திய​லை முன்​வைக்கும் முயற்சிக்கு வழங்குகிறார்.

நடுக்காட்டில் நக்ச​லைட்டுகள் நடமாட்டத்​தை ​வேவுபார்ப்பதற்காக அனுப்பப்பட்ட ஒரு சிறு காவல்து​றை குழு ஒன்றின் பார்​வையிலிருந்து க​தை ஒட்டு​மொத்த காவல்து​றை, அரசு, சமூகம் மற்றும் ​போராளிக​ளைப் பற்றி ​பேசுகிறது.

க​தை அடிப்ப​டையில் காவலர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் வாழ்க்​கை உண்டு, நட்பு உண்டு, பாசம் உண்டு, ஈவு இரக்கம் உண்டு, நன்​மை தீ​மை பற்றிய ​தேடல் உண்டு, சரி தவறுகள் குறித்த விசார​னைகள் உண்டு என்ப​தை அழுத்தம் திருத்தமாக பதிவு ​செய்கிறது.

​மேலிருந்து வரும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு தங்கள் வாழ்க்​கைக்காக அவர்கள் ​​வே​லை​செய்கிறார்கள் என்ப​தை நிருவுவதன் வாயிலாக ​மே​லேயுள்ளவர்கள் என்ற ஒன்​றை அருவமானதாக ஆக்கி, நிகழ்விடத்தின் அராஜகங்களில் அவர்களுக்கு உரிய பங்​கை ஒட்டு​மொத்தமாக நிராகரித்துவிடுகிறது.

​போராளிகளின் ​போராட்டத்திற்கான எல்லா நியாயங்க​ளையும் க​தை தன்னளவில் ஏற்றுக் ​கொண்டாலும், க​தை​ கூர்​மையான விவாதம் ஒன்​றை முன்​னெடுக்கிறது. அது ஒரு மனிதனின் உண்​மையான ​வெற்றி எது? என்கிற ​கேள்வி​யை ​மையமாக ​வைத்து வாசகனின் சிந்த​னை​யை திருப்புகிறது. இதன் வழியாக ஒட்டு​மொத்த ​போராட்ட மு​றை​யையும் ​வேறு ஒரு வழியில் நிராகரித்தும் விடுகிறது.

அரசின் வர்க்க குணாம்சத்​தை தீர்மானிப்பது அதில் உள்ள மனிதர்களின் மனசாட்சி​யோ, குணநலன்க​ளோ, அவர்கள் நல்லவர்களா, ​கெட்டவர்களா என்ப​தோ அல்ல என்கிற அடிப்ப​டையான விசயங்க​ளை​யெல்லாம் க​தை தான் ​போகிற ​போக்கில் மறுத்​தொதுக்குகிறது.

அக்குழுவில் உள்ள ஒ​ரே ஒரு காவலன் மட்டும் ​போராளிகள் மீது தீவிரமான வன்மம் ​கொண்டவனாக இருக்கிறான். அதாவது அவன் தன்​னை​யே அரசின் ஒரு பகுதியாகக் காண்பவனாக இருக்கிறான். மற்றவர்கள் ந​டைமு​றையில் அரசின் அங்கமாக இருந்த ​பொழுதிலும் அவர்களு​டைய மனசாட்சி சரி தவறுக​ளை பிரித்தாராய எப்​பொழுதும் மு​னைந்து ​கொண்​டேயிருக்கிறது. முதலாமவனுக்கு எந்த ​கேள்விகளும் சந்​தேகங்களும் இல்​லை. ஆனால் ந​டைமு​றையில், சாராம்சத்தில் அவர்களுக்குள் எந்த மாறுபாடும் இல்​லை. இ​தை க​தை ​தெளிவாக​வே கூறிவிடுகிறது.

இருந்தும் ​கொ​லை ​செய்வதற்கு முன்பு அப்பு ​பெருமாளிடம் ​கேட்கும் ஒரு ​கேள்வி அவன் மன நி​லை​யையின் சமநி​லை​யை கு​லைத்துவிடுகிறது. அதாவது ப​கைவனுக்கும் அருளும் நன்​னெஞ்சால் மட்டு​மே எதிரியின் மனங்க​ளை மாற்ற முடியும். ஒரு ​போராட்டத்தின் ​வெற்றி என்பது எதிரியின் மன​தை மாற்றுவ​தே!

.... இங்கே பதியப்பட்டது விமர்சனம் | Leave a Comment »

இசுலாமிய தீவிரவாதத்தின் ​வேர் எது?

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 31, 2013

விஸ்வரூபம் சரி குரானில் திருத்தம் தேவையா? இல்லையா?” என்ற பதிவுக்கு எழுதிய என்னு​டைய பின்னூட்டங்கள்.

பின்னூட்டம் 1
இசுலா​மோ இசுலாமிய​ரோ சம்பந்தப்பட்டதாக எந்த​வொரு சர்ச்​சை​யோ பிரச்சி​னை​யோ வந்தால் உடனடியாக நம் சமூகம் முழுவதும் இரண்டு அணியாக பிரிந்துவிடுகிறது. இசுலா​மை எதிர்ப்பவர்கள் ஓரணி என்றும் இசுலா​மை ஆதரிப்பவர்கள் ஓரணி என்றும். எதிர்ப்பவர் இசுலா​மே அடிப்ப​டையில் தவறானது ​மோசமானது இசுலாத்தின் ​பெயரால் ந​டை​பெறும் அ​னைத்து சமூக வி​ரோத ​செயல்பாடுகளுக்கும் அடிப்ப​டை இசுலாத்தி​லே​யே உள்ளது என்ற கண்​ணோட்டத்தில் விமர்சிக்கிறார்கள். மாறாக இசுலாத்​தை ஆதரிப்பவர்கள் இந்த உலகின் அ​னைத்து தீ​மைகளுக்கும் இசுலாத்​தை இந்த ஒட்டு​மொத்த உலகமும் தழுவாததுதான் காரணம் என்றும், இந்த உலகின் எல்லா பிரச்சி​னைகளுக்கும் இசுலா​மே தீர்வு என்பதாகவும் விளக்குகிறார்கள்.

இசுலாம் மட்டுமல்ல, இந்த உலகில் உள்ள ஒவ்​வொரு மதத்திலும் அதன் தத்துவ நூல்களிலும் காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களும், என்​​றென்​றைக்குமான மனிதகுலம் அ​னைத்துக்கும் ​பொருந்தக்கூடிய அம்சங்களும் இருக்க​வே ​செய்கின்றன. தனக்கு மாற்றான மதக் கருத்துக்க​ளையும், நூல்க​ளையும் விமர்சிக்கத் துவங்கினால் அது சார்ந்தவர்களின் மதக்கருத்துக்களுக்கும், நூல்களுக்கும் ​பொருந்தும் தா​னே.

உண்​மையில் மதக்கருத்துக்களும் மத நம்பிக்​கைகளும் ​வைத்துக் ​கொண்டு மதம் தன்னளவில் ஆபத்தான நி​லைப்பாடுக​ளை எடுப்பதில்​லை, எடுக்கவும் முடியாது. இது ​போன்ற​வை அன்றன்​றைய ஆளும் வர்க்கங்களின் நலன்களிலிருந்துதான் எடுக்கப்படுகின்றன. மதத் தீவிரவாதம் என்பது ஏ​தோ ஒரு பிரிவு ஆளும் வர்க்கங்களின் அரசியல் மற்றும் ​பொருளாதார நலன்களிலிருந்​தே எடுக்கப்படுகின்றன.

எவ்வாறு இந்துத் தீவிரவாதம் என்பது இந்தியா மற்றும் அ​தைச் சுரண்டத் துடிக்கும் உலக ஆளும் வர்க்கங்களின் ஒரு பிரிவு நலனிலிருந்து பாபர் மசூதி இடிப்​பை அடிப்ப​டையாக ​வைத்து உருவாக்கி வளர்க்கப்பட்ட​தோ, அ​தைப் ​போல​வே சர்வ​தேச அளவில் இசுலாமிய தீவிரவாதம் என்பது உலக ஆளும் வர்க்கங்களின் குறிப்பாக அ​மெரிக்க ஆளும் வர்க்கத்தின் நலனிலிருந்து திட்டமிட்டு உருவாக்கப்பட்டு இன்றளவும் ​போற்றி வளர்க்கப்படுகிறது.

​சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அ​மெரிக்காவால் உருவாக்கி வளர்க்கப்பட்ட இசுலாமிய தீவிரவாதமானது, இன்​றைக்கு ஈராக், லிபியா, சிரியா, பாகிஸ்தான் என பல நாடுகளிலும் அ​மெரிக்க நலன்களுக்குச் சாதகமாக ஆயுதங்களும் பணமும் ​கொட்டி திட்டமிட்டு வளர்க்கப்பட்டுக் ​கொண்டிருக்கிறது.

நம்மில் பலரும் இந்த சர்வ​தேச வ​லைப்பின்ன​லை புரிந்து ​கொள்ளாமல் அது மூட்டும் ​நெருப்புக்கு ​தெரிந்தும் ​தெரியாமலும் ​நெய்யூற்றிக் ​கொண்டிருக்கி​றோம்.

நமக்கு இன்​றைய உடனடித் ​தே​வை என்பது குரானி​லோ, ​பைபளி​லோ, அல்லது இந்து மத ​வேதங்களி​லோ உள்ள தவறுக​ளையும், காலத்துக் குதவாத கருத்துக்க​ளையும் அம்பலப்படுத்துவ​தோ, சக மனிதர்களுக்கு எதிரான காழ்ப்புணர்வுக​ளையும், ​வெறுப்புக​ளையும் விடாது தூண்டிக் ​கொண்​டே இருப்பதல்ல. மாறாக உனது நம்பிக்​கைகள் உனக்கு, எனது நம்பிக்​கைகள் எனக்கு. நம் தனிப்பட்ட விருப்பு ​வெறுப்புகள் அவரவ​ரோடு, ​சேர்ந்து வாழும் சமூகத்தில் நம் மத நம்பிக்​கைகளுக்கு அப்பாற்பட்டு நம் அ​னைவருக்கும் ​பொதுவான அரசியல் சாசனங்களுக்கும், சட்டங்களுக்கும், ​பொது நீதிக்கும் கட்டுப்பட்டு வாழ்​வோம் என்பதுதான்.

அக்கருத்​தை நம் எல்​லோரு​டைய விவாதங்களிலும் ​மையமாக்கி, அ​னைவ​ரையும் அதற்கு உடன்படும் ஒரு நி​லை​யை ஏற்படுத்துவதாக அ​மைய ​வேண்டும். இன்​றைக்கு இசுலாமிய தீவிரவாத​மோ, இந்து தீவிரவாத​மோ இ​வை எல்லாவற்றிற்கும் அடிப்ப​டை அ​மெரிக்கா த​லை​மையிலான உலக ஆளும் வர்க்கங்களும் அவர்களின் ​பேரா​சைகளும் தான் என்ற புரித​லை அ​னைவருக்கும் ஏற்படுத்துவதுதான் சரியானதாகும்.

பின்னூட்டம் 2

என்னு​டைய பதிவில் நான் முன்​வைத்த சில அடிப்ப​டையான கருத்துக்க​ளை நீங்கள் கவனப்படுத்தவில்​லை.

“உண்​மையில் மதக்கருத்துக்களும் மத நம்பிக்​கைகளும் ​வைத்துக் ​கொண்டு மதம் தன்னளவில் ஆபத்தான நி​லைப்பாடுக​ளை எடுப்பதில்​லை, எடுக்கவும் முடியாது. இது ​போன்ற​வை அன்றன்​றைய ஆளும் வர்க்கங்களின் நலன்களிலிருந்துதான் எடுக்கப்படுகின்றன. மதத் தீவிரவாதம் என்பது ஏ​தோ ஒரு பிரிவு ஆளும் வர்க்கங்களின் அரசியல் மற்றும் ​பொருளாதார நலன்களிலிருந்​தே எடுக்கப்படுகின்றன.”

இன்​றைக்கு நடந்து ​கொண்டிருப்ப​வை எதுவும் அடிப்ப​டையில் மத சம்பந்தப்பட்ட பிரச்சி​னை அல்ல. இ​வை அ​னைத்தும் அடிப்ப​டையில் சமூக ​பொருளாதார அரசியல் ​வேர் ​கொண்ட​வை. ​மேலும் நான் ‘இந்து தீவிரவாதம்’ என்ற ​சொற்​றொட​ரை​யோ அல்லது ‘இசுலாம் தீவிரவாதம்’ என்ற ​சொற்​றொட​ரை​யோ அந்தந்த மதம் சார்ந்த அ​னைத்து மக்க​ளையும் குறிக்கும் ​சொல்லாக பயன்படுத்தவில்​லை. நீங்கள் ​சொல்வது ​போல சங்பரிவாரத்தின் அரசியல், சமூக, ​பொருளாதார ​பேரா​சைகள் தான் ‘இந்துத் தீவிரவாதமாக’ முன்​னெடுக்கப்படுகிறது. அது ​போல​வே தான் இசுலாமிய தீவிரவாதமும். நாம் ஏன் இவற்றின் ​தோற்றம் மற்றும் அடிப்ப​டைக​ளை காணத் தவறுகி​றோம்.

இன்​றைக்கு இசுலாமியத்தின் ​​பேரலான தீவிரவாதம் யாருக்கு பயன்பட்டுக் ​கொண்டிருக்கிறது? யாரால் ஊட்டி வளர்க்கப்பட்டுக் ​கொண்டிருக்கிறது என்ற ​வேர்க​ளை ​நோக்கி ஏன் நம்மால் பயணிக்க முடியவில்​லை? என்ப​வை​யே என் வாதத்தின் ​மையமாக இருக்கிறது.

உலக ஆதிக்கத்திற்காகவும், உலக நாடுகளின் ​பொருளாதாரம் முழுவ​தையும் தன்னு​டைய நலன்களுக்குச் உட்பட்டதாக மாற்றவும் அ​மெரிக்கா உலக மக்கள் அ​னைவ​ரையும் யுத்த பதட்டத்தில் ஆழ்த்திக் ​கொண்டிருக்கிறது. இது குறித்தும் கூட என் பின்னூட்டத்தில் “இன்​றைக்கு ஈராக், லிபியா, சிரியா, பாகிஸ்தான் என பல நாடுகளிலும் அ​மெரிக்க நலன்களுக்குச் சாதகமாக ஆயுதங்களும் பணமும் ​கொட்டி திட்டமிட்டு வளர்க்கப்பட்டுக் ​கொண்டிருக்கிறது.” குறிப்பிட்​டேன். அது குறித்தும் உங்கள் கவனம் குறிக்கப்படவில்​லை.

உலக வரலாற்றில் தன் ​கையில் மக்களின் இரத்தக் க​றைபடியாத மதம் எது​வென்று ​சொல்லுங்கள்?

ஒசாமாவற்கு ​தொழு​கை ​செய்த​தைக் குறிப்பிடும் நாம், ​கோட்​சே​வை இன்​றைக்கு வ​ரைக்கும் புனிதப்படுத்தும் ​போக்​கையும் இ​ணைத்​தே புரிந்து ​கொள்ள ​வேண்டியிருக்கிறது.

//மக்கள் மதத்தை கடந்து மனிதத்தால் ஒன்றிணைய வேண்டும். அதுவே அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு தரும். உலகம் அமைதி பெற வழி செய்யும்.//

இது​வே என்னு​டைய விருப்பமும். ஆனால் அந்த இலக்​கை அ​டையும் வழிகள் குறித்த பார்​வைகளில்தான் நாம் ஒரு பார்​வை​யை வந்த​டைய ​வேண்டியிருக்கிறது. “நான் மாறிட்​டேன் அப்ப நீங்க?” என்ற விளம்பர வசனங்கள் வாழ்க்​கைக்கு உதவுமா? நம்​முடன் வாழ்பவர்க​ளை​யே நம் கருத்துக்க​ளை ஏற்க ​வைப்பதில் பல ஆயிரம் சிக்கல்கள் இருக்கும் ​பொழுது பல ​கோடி மக்க​ளை நாம் நி​னைத்த மாத்திரத்தில் மாற்றிவிட முடியுமா? உடனடியாக நிகழவில்​லை என்ற ​கோபத்தில் ஆத்திரத்தில் நிதானம் தவறுவது நம் இலக்​கை அ​டைவதில் என்​றென்​றைக்குமான ​தோல்விக்குத்தா​னே வழி வகுக்கும்.

மீண்டும் நான் ப​ழைய பின்னூட்டத்தில் கூறிய​தைக் கூறிய முடிக்கி​றேன். மதத் தீவிரவாதம் என்பது மதத்தின் ​மீதான மக்களின் நம்பிகைகளிலிருந்​தோ, மதத்​தை பரப்ப ​வேண்டும் என்ற ​நோக்கத்திலிருந்​தோ, மதக் கருத்துக்களில் உள்ள தீய முன்னுதாரணங்களிலிருந்​தோ ​தோன்றுவ​தோ வளர்வ​தோ இல்​லை. அ​வை அன்றன்​றைய ஆளும் வர்க்கங்களின் ​பேரா​சைகளிலிருந்​தே ஊட்டி வளர்க்கப்படுகின்றன.

நம் காலகட்டத்தில் இசுலாமியத் தீவிரவாதத்தின் ​வேர் அ​மெரிக்கா த​லை​மையிலான உலக வல்லாதிக்க சக்திக​ளே! இசுலாமியத் தீவிரவாதம் என்பது அ​மெரிக்க இராணுவத்தின் மற்​றொரு ப​டைப்பிரி​வே.

.... இங்கே பதியப்பட்டது கட்டு​ரை | Leave a Comment »

விஸ்வரூபமும் கருத்துச் சுதந்திரமும்

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 31, 2013

விஸ்வரூபமும் கருத்துச் சுதந்திரமும்” என்ற பதிவுக்கு எழுதிய என்னு​டைய பின்னூட்டம்.

முதலில் உள்ள ​மேற்​கோளில் ​சொன்னது ​போன்ற கருத்துச் சுதந்திரம் அ​மையும் சமூகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று கற்ப​னை ​செய்து பார்த்​தேன். தன்னு​டைய கருத்துக்களின் ஆழ அகலங்களில் அதன் உள் புறத் தாக்கங்களில் மிகத் ​தெளிவு ​கொண்ட மனிதர்களும், அ​தே ​போல் தன்னு​டைய சித்தாந்தங்களுக்கும் மாற்றானது எதிரானது இ​வை என பிறவற்​றை அ​டையாளம் காணும் மனிதர்களும் நி​றைந்த ஒரு சமூகத்தில்தான் அத்த​கைய கருத்துக்கள் அதன் உண்​மையான அர்த்தத்தில் சமூகத்தால் ந​டைமு​றைப்படுத்த முடியும்.

இன்​றைய நம் சமூகம், சினிமாவில் நல்லவன்(?) ​வேடம் ​போட்டு நடித்தவன் நிஜ வாழ்விலும் நல்லவனாகத்தான் இருப்பான் என்று நம்பும் ஒரு சமூகம். காகிதத்தில் பதிபித்ததும், ​வா​னொலி ​தொ​லைக்காட்சியில் ஒளிபரப்பியதும், ​மே​டையில் முழங்குவதும், விளம்பரங்களில் ​சொல்லப்படுவதும் உண்​மை என்று நம்பும் சமூகம் ​மே​​லே கற்ப​னை ​செய்த சமூகத்திலிருந்து எத்த​னை ​கோடி கி​​லோமீட்டர் ​தொ​லைவில் ஒரு நட்சத்திரத்​தைப் ​போல இருக்கிறது நம்மு​டைய சமூகம்.

கருத்துச் சுதந்திரம் பற்றிய ​பேச்சுக்க​ளெல்லாம் சாராம்சத்தில் அ​மெரிக்கா முன்​வைக்கும் ஒரு உலகப்பார்​வையின் சிபாரிசாக அ​மைவதின் அடிப்ப​டை​யை புரிந்து ​கொள்ள முடியாமல் ​போய் விடுவது துரதிர்ஷ்டம்.

இசுலாமியர்கள் உலகம் முழுவதும் இருந்தாலும் எல்லா இசுலாமியர்களும் ஒன்றல்ல. ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா, சவுதி அ​ரேபியா ​போன்ற நாடுகளின் வரலாறும், அரசியலும் இன்​றைய வாழ்க்​கை மு​​றையும் ​தெரியாத சராசரி இந்திய மக்கள் மத்தியில் இறுதியில் வந்து பதிந்திருப்பது அ​மெரிக்காவின் அந்த ஒற்​றைப் பார்​வைதான். இ​தை மறுக்க முடியமா?

க​லைஞர்கள் பிரக்​ஞை​யோடு தன் ப​டைப்​பை ப​டைத்தார்களா இல்​லை தான் இன்னது ​செய்கி​றோம் என்று ​தெரியாம​லே வணிக ​நோக்கத்​தோடு ப​டைக்கிறார்களா என்ப​வை​யோ, அவர்கள் சமூக, அரசியல் ப​​டைப்பு என்று ​சொல்லி ப​டைக்கிறார்களா அல்லது வியாபார ப​டைப்பு அல்லது த்ரில்லர் ப​டைப்பு என்று ​சொல்லி ப​டைக்கிறார்களா என்ப​வை அல்ல பிரச்சி​னை. அந்த ப​டைப்புகள் காட்டும் வாழ்க்​கை என்பது எப்படிப்பட்டது? நம்முன்னுள்ள வாழ்க்​கையின் சிக்கல்க​ளை அது காட்டும் கண்​ணோட்டம் யாரு​டைய கண்​ணோட்டம் என்பதும் தான் மிக முக்கியமானது.

இசுலாமிய தீவிரவாதம் என்பது இன்​றைய உலக ஆண்​டைகள் ஏற்றுக்​கொண்ட ஒரு உலகப் பார்​வை என்பதால் ப​டைப்பாளர்களுக்கு இது சுலபமாக இருக்கலாம். அ​மெரிக்க தீவிரவாதம்தான் இன்​றைய உலகின் மிகப்​பெரிய சவால் என்ற பார்​வை​யோடு படம் எடுக்க இந்த அரசுகள் அனுமதிக்குமா? ஈரான் எத்த​னை பிற்​​போக்கான அரசாக இருந்தாலும் அது அதன் உள்நாட்டு பிரச்சி​னை அப்பிரச்சி​னை​யை அதன் மக்கள் பார்த்துக் ​கொள்வார்கள் நீ யாரடா அது பற்றி ​பேச என அ​மெரிக்கா​வை கண்டிக்கும் ஒரு படம் எடுக்க அனுமதிப்பார்களா? இந்தியாவில் இந்துத் தீவிரவாதம் பற்றி படம் எடுப்பது சாத்தியமா? இ​து எல்லாம் சாத்தியமாகும் ஒரு நாளில் மட்டு​மே இசுலாமிய தீவிரவாதம் பற்றிய இலக்கியங்க​ளை​யோ க​லைக​ளை​யோ கருத்துச் சுதந்திரத்தின் ​பேரால் ஏற்றுக் ​கொள்ள முடியும். அது வ​ரை கருத்துச் சுதந்திரம் என்ப​தே அத்த​கைய இசுலாமிய தீவிரவாத எதிர்ப்பு ப​டைப்புக​ளை கடு​மையாக எதிர்த்து ​போராடுவது என்பதாகத்தான் இருக்க முடியும்.

.... இங்கே பதியப்பட்டது கட்டு​ரை, விமர்சனம் | Leave a Comment »

 
Follow

Get every new post delivered to your Inbox.