எனது நாட்குறிப்புகள்

பார்க்க சினிமா, படிக்க புத்தகம், ​கொறிக்க பாப்கார்ன்

Posted by ம​கேஷ் மேல் ஜனவரி 18, 2011

புத்தகங்கள் எழுதி ​வெளியிடுவதில் இரண்டு விதமான ​போக்குகள் உள்ளன என நி​னைக்கி​றேன்.

தன்னு​டைய கருத்துக்க​ளை, சிந்த​னைக​ளை, ஆய்வுக​ளை, ப​டைப்புக​ளை ​வெளிக்​கொணர ​வேண்டும் என்பது முதல் வ​கை. புத்தக விற்ப​னையில் இன்​றைக்கு நல்ல வியாபாரம் ஆகக் கூடிய த​லைப்புகள் என்ன​வென்று ​தேடித் ​தொகுத்து அவற்​றை வாசகர்கள் விரும்பும் வ​கையில் அ​மைத்து ​வெளியிடுவது இரண்டாவது வ​கை.

இன்​றைக்கு ​பெரும்பான்​மையான தமிழ் புத்தக ​வெளயீடுகள் இந்த இரண்டாவது வ​கை​​யை​யே சாருகிறது என​வே நி​னைக்கி​றேன்.

முதலில் இவர்கள் எந்தத் து​றை சார்ந்த புத்தகங்கள் அதிகம் விற்ப​னை ஆகின்றன என கள ஆய்வுகள் ​மேற்​கொள்கிறார்கள் (இவற்​றை நாம் அறிந்து ​கொள்வதற்கு சுலபமான வழி, இத்த​கைய பதிப்பகங்கள் ​வெளியிடும் புத்தகங்க​ளை ​வைத்​தே அவற்​றை நாம் புரிந்து ​கொண்டுவிடலாம்.). இரண்டாவதாக எத்த​கைய மனப் ​போக்குகள் ​கொண்ட மக்கள் புத்தகங்கள் படிக்கிறார்கள்? அத்த​கைய மக்களின் புத்தகத் ​தே​வைகள் எப்படிப்பட்டனவாக இருக்கின்றன? என ​மேலும் புதிய த​லைப்புகளில் புத்தகங்க​ளை ​வெளியிடுவதற்காக ஆய்வுகள் ​செய்கிறார்கள்.

இத்த​கைய ​போக்குகள் முழுக்க முழுக்க ஜவுளிக் க​டைகளும், வீட்டு உப​யோகப் ​பொருட்கள் விற்ப​னையகங்களும் க​டைபிடிக்கும் வழிமு​றைகளாக​வே உள்ளன. இன்​றைக்கு புத்தகங்கள் தயாரிப்பு மற்றும் ​வெளியீட்டிற்கான இலக்கணங்கள் ​நேற்​றைய ​பொருளில் இல்​லை. இந்தியா சுதந்திரம் ​பெறுவதற்கு முன்பும் ​பெற்ற பின்பும் இருந்த நில​மைகள் இ​ன்​றைக்கு இல்​லை. அப்​பொழுது அரசுக்கு எதிரான ​செய்தித்தாள்களும், பத்திரி​கைகளும், புத்தகங்களும் விற்ப​னை ​செய்ய த​டை இருந்தன. அத​னையும் மீறி அ​வை எங்​கெங்​கோ பதிப்பிக்கப்பட்டு மிகமிக ரகசியமாக மக்க​ளைச் ​சென்ற​டைந்தன. குறிப்பாக கம்யூனிச புத்தகங்கள் இந்தியாவிற்குள் ​கொண்டுவரப்பட்டதும், அ​வை மக்கள் மத்தியில் ​கொண்டு ​​செல்லப்பட்டதும் எத்த​கைய துப்பறியும் க​தைக​ளைவிடவும் சுவாரசியமான​வை.

ஆனால் அவற்றின் ​நோக்கங்கள் நாட்டில் புரட்சி​யை ஏற்படுத்துவதாக, ஏ​ழை மக்கள் அத்தத்துவங்க​ளை படித்துணர ​வேண்டும். சரிக​ளையும் தவறுக​ளையும் இனம் கண்டு ​கொண்டு தங்கள் பா​தைக​ளையும் பார்​வைக​ளையும் ​தெளிவும் உறுதியும் படுத்திக் ​கொள்ள ​வேண்டும் என்ற ​நோக்கங்க​ளைக் ​​கொண்டதாக இருந்தது. அத்த​கைய புரட்சி ​​வே​லைகளில் ஈடுபட்டுக் ​கொண்டிருந்தவர்கள் தான் அத்த​கைய இலக்கியங்க​ளை எழுதி ரகசியமாக ​வெளியிட்டு மக்கள் மத்தியில் பரப்பிக் ​கொண்டிருந்தார்கள்.

ஆனால் இன்​றைக்கு புத்தகங்கள் எழுதுபவர்கள் வாழ்க்​கைக்கும், ​நோக்கங்களுக்கும், ​செயல்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாத விசயங்க​ளை​யெல்லாம் வியாபாரம் வருமானம் என்ற காரணங்களுக்காக​வே எழுதுகிறார்கள். “ஸ்டாலின்”, “மா ​சே துங்”, “​லெனின்”, “காரல் மார்க்ஸ்”, “டிராட்ஸ்கி”, “முதல் உலகப் ​போர்”, “இரண்டாம் உலகப் ​போர்”, “மக்கள் சீனம்”, “​சே கு​வேரா” எல்லா த​லைப்புகளிலும் நவீன மு​றையில் அச்சடிக்கப்பட்ட கவர்ச்சிகரமான அட்​டைகளுடன், தரமான காகிதத்தில் ஏ​ழை உ​ழைக்கும் மக்கள் வாங்க முடியாத வி​லைகளில் (நல்ல ​வே​ளை இத்த​கைய புத்தகங்கள் அவர்கள் ​கைகளுக்கு ​போய் அவர்கள் இத்த​கைய விசயங்களின் மீது அதிருப்தி அ​டைய விடாமல் பணம் தடுக்கிறது) விற்ப​னையாகிக் ​கொண்டிருக்கின்றன.

“இரண்டாம் உலகப் ​போர்” பற்றி எழுத முடிவு ​செய்தவுடன் எங்கிருந்து துவங்குவது என ​யோசிக்கிறார்களாம்! உலக ​பொருளாதார ​நெருக்கடி, முதலாளித்துவ உற்பத்தி மு​றையின் ​இயக்கப் ​போக்கு, அதன் இயல்பான உற்பத்தி மு​றை சுழற்சியில் தவிர்க்க முடியாமல் ஏற்படும் தேக்கம் மற்றும் ​நெருக்கடி, உல​கை மறுபங்கீடு ​செய்து ​கொள்வதற்கான ஏகாதிபத்தியங்களுக்குள்ள கட்டாயம், உலகம் இரு ​பெரும் அணிகளாக அணி ​சேர்ந்ததன் பின் புலம், உலகப் ​போ​ரின் காரணங்க​ளை ஆய்வு ​செய்வதில் க​டைபிடிக்கப்படும் பல்​வேறு தத்துவப் ​போக்குகள், அவற்றின் நி​றை கு​​றைகள், ஆகியவற்றிலிருந்து துவங்குவதில் அவர்களுக்கு விருப்பமில்​லை. அது வாசகர்களுக்கு ஒரு க​தை படிப்பது ​போல சுவாரசியமான ​பொழுது ​போக்கான வாசிப்பிற்கு உதவாது, சீக்கிரம் சலிப்புற்று புத்தகத்​தை கடாசி விடுவார்கள் என​வே ஹிட்லரிடமிருந்து இரண்டாம் உலகப் ​போ​ரைத் துவங்கி ஹிட்லரின் ம​றை​வோடு புத்தகத்​தை முடிப்பது ஒரு சுவாரசியமான விறுவிறுப்பான துப்பறியும் க​தை ​சொல்லும் ​போக்காக அ​மையும் என முடிவு ​செய்கிறார்கள்.

“இரண்டாம் உலகப் ​போர்” பற்றிய இந்த அணுகுமு​றை​யை “முதல் உலகப் ​போர்” விசயத்தில் க​டைபிடிக்க முடியவில்​லை என்பது அவர்களுக்கு மிகுந்த அயர்ச்சி​யையும் குழப்பத்​தையும் ஏற்படுத்துகிறது. முதல் உலக யுத்தத்தின் ​தொடக்கம் முதல் முடிவு வ​ரை இப்படியாக ஒரு மனித​னைச் சுற்றி பின்னிக் காட்ட முடியவில்​லை என்ப​தை ஏ​தோ ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளனுக்கு மனித குல வரலாற்றின் ஓரிடத்​தை பற்றிய எந்தக் குறிப்பும் கி​டைக்காமல் அவ்விடத்​தை கடக்க முடியாது திண்டாடுவ​தைப் ​போல ​பெரிய அளவில் அங்கலாய்ப்​பை ஏற்படுத்துகிறது.

வரலாறு என்னும் மா​​பெரும் அண்ட​வெளி​யை ​நோக்கி வாசகன் என்னும் துக​ளை அ​ழைத்துச் ​சென்று அதன் விதிக​ளையும் ​செயல்மு​றைக​ளையும் முரண்க​ளையும் அறிமுகப்படுத்தி வரலா​றை அதன் முழு​மையிலிருந்து, தன் காலத்தின் ​தே​வைகளிலிருந்து, தன்னு​டைய பலஹீனங்களிலிருந்து ​வெளி​யே வந்து, கற்றுக் ​கொள்ள பயிற்சியளிப்ப​தை விட்டுவிட்டு, வாசகன் என்னும் துகளுக்குள் அண்ட​வெளி ​என்னும் மா​பெரும் இயக்கப் ​போக்​கை ​வெட்டிச் சி​தைத்து சின்னாபின்னப்படுத்தி நு​ழைக்க முயற்சிக்கும் முட்டாள்தனமாக​வே படுகிறது.

மேற்​சொன்ன புத்தகங்களில் அரசியல் ​பொருளாதார பிரச்சி​னைகள், முதலாளித்துவ ​நெருக்கடிகள், உல​கை மறுபங்கீடு ​செய்வதற்கான ​நோக்கங்கள் பதிவாகியிருக்கலாம். ஆனால் நிசசயம் அ​வை அவற்றிற்கான முக்கியத்துவத்​தோடும் வரலா​றை இயக்கியதில் அந்த விதிகள் ஆற்றிய தீர்மானகரமான பங்கு என்னும் அடிப்ப​டையில் அ​​வை பதிவாகியிருக்க வாய்ப்பில்​லை. காரணம் எழுத்தின் ​நோக்கம், எழுத்தாளனின் எதிர்பார்ப்புகள் தான் விசயங்க​ளை விளக்குவதில் தீர்மானகரமான பங்கு வகிக்கின்றன.

“ஸ்டாலின்”, “மா ​சே துங்”, “​லெனின்”, “காரல் மார்க்ஸ்”, “டிராட்ஸ்கி”,  “​சே கு​வேரா” என பல கம்யூனிச த​லைவர்களின் ​பெயர்களில் புத்தகங்கள் ​வெளியாகின்றன. எனக்கு இ​வை எதுவு​மே உவப்பானதாக இல்​லை. ​பொதுவாக இத்த​கைய தனிமனிதர்களின் ​பெயரிலான புத்தகங்கள் அ​னைத்தும் கதாநாயகர்க​ளை அல்லது வில்லன்க​ளை கட்ட​மைக்கும் ஒரு முயற்சியாக​வே படுகிறது. அடிப்ப​டையில் இது வீரதீர சாகச க​தை பாணிக​ளை​யோ அல்லது திகில், உளவு, துப்பறியும் க​தை பாணிக​ளை​யோ ​கொண்டதாக​வே உள்ளன.

இப்படிப்பட்ட புத்தகங்க​ளை எழுதும் ஆசிரியர்களுக்கு “வரலாற்றில் தனிமனிதர்கள் வகிக்கும் பாத்திரம்” குறித்​தோ “வரலாற்று இயக்கப் ​போக்கில் தனிமனிதர்களுக்கான முக்கியத்துவம்” குறித்​தோ எந்த ஞானமும் இல்லாதிருப்பதும். சமூக முன்​னேற்றதில், மனித குலத்தின் விடுத​லையில் அவர்களுக்கு எந்த அக்க​றையும் இல்​லை என்ப​தையும், ​வெறும் வியாபார ​நோக்கங்களுக்காக​வே மனிதர்க​ளை உயர்த்தியும் தாழ்த்தியும் ​எழுதுகிறார்கள் என்​றே நம்புகி​றேன்.

நித்யானந்தாவிடமும், ஜக்கி வாசு​தேவிடமும், ரவிசங்கரிடமும், சிவசங்கர பாபாவிடமும் ஏமாறும் மக்களுக்கு அவர்கள் மீது ஈர்ப்பு ஏற்படவும் ​வெறுப்பு ஏற்படவும் என்​னென்ன காரணங்கள் இருந்தன​வோ அ​தே ​போன்ற காரணங்க​ளைத்தான் ​மேற்​​சொன்ன த​லைவர்களின் ​மேலும் இவர்கள் கட்ட​மைக்க முயல்கிறார்கள்.

உலகம் நம்​மை ​நோக்கி வராது, நாம் தான் உல​கை ​நோக்கி முன்​​னேறக் கற்றுக் ​கொள்ள ​வேண்டும்; சமூக வாழ்​வையும், இயற்​கை​யையும், வரலா​றையும், விஞ்ஞானத்​தையும், இலக்கியத்​தையும் அதன் அடிப்ப​டையிலிருந்து ​ஐயம் திரிபுற புரிந்து ​கொள்வதற்கு மனித குலம் சகலவிதமான ​வேற்று​மைகளிலிருந்தும் ஏற்றதாழ்வுகளிலிருந்தும் முழு​மையான விடுத​லை ​பெற ​வேண்டும் என்ற மிக உயர்ந்த லட்சியங்களும் கனவுகளும் ஒரு மனிதனுக்குள் எந்தச் சூழலிலும் அ​ணையாத ​ஜோதியாய் சுடர்விட்டு பிரகாசித்துக் ​கொண்டிருக்க ​வேண்டும் என்ற உண்​மை​யை ​சொல்லித்தராத எந்த எழுத்தும் ​யோக்கியமான எழுத்தாக இருக்கமுடியாது. எந்த புத்தகமும் பயனுள்ள புத்தகமாக இருக்க முடியாது.

4 பதில்கள் to “பார்க்க சினிமா, படிக்க புத்தகம், ​கொறிக்க பாப்கார்ன்”

  1. சங்கர் said

    அருமையான பதிவு. ஆழமான விமர்சனம்.

    சினிமா ஒரு கலை. ரசனைமிக்க ஒரு பொழுதுபோக்கு என்றில்லாமல்,ஒரு குத்துப் பாட்டு, இடை அழகிகள், தொடை அழகிகள் என்று கடமைத்து காசுபார்க்கும் கூத்தாடிதனம்தான் இப்போது இப்போது
    புத்தக வெளியீட்டிலும் நடக்கின்றது.

    அதைவிட கூத்து, இவர்கள் வெளியிடும் புத்தகங்களை இவர்களே இலக்கியம் என்று சொல்லில் கொள்வார்கள்

    சங்கர்

  2. Pattu said

    Very true.Most of the POP books are useful , may be , in the initial reading years. Public needs to create a habit of in-depth reading. Unfortunately , neither the family nor the educational heirarchy is interested in developing this habit. Instant gratification is the only mantra.

  3. மிக சரியான பதிவு. கிழக்கு ஒரு கமர்சியல் பதிப்பகம்.

    Prodigy Books – All are waste. சிந்து சமவெளி நாகரிகம் முதலிய எல்லாம் குப்பை புத்தகங்கள்.

    //இப்படிப்பட்ட புத்தகங்க​ளை எழுதும் ஆசிரியர்களுக்கு “வரலாற்றில் தனிமனிதர்கள் வகிக்கும் பாத்திரம்” குறித்​தோ “வரலாற்று இயக்கப் ​போக்கில் தனிமனிதர்களுக்கான முக்கியத்துவம்” குறித்​தோ எந்த ஞானமும் இல்லாதிருப்பதும். சமூக முன்​னேற்றதில், மனித குலத்தின் விடுத​லையில் அவர்களுக்கு எந்த அக்க​றையும் இல்​லை என்ப​தையும், ​வெறும் வியாபார ​நோக்கங்களுக்காக​வே மனிதர்க​ளை உயர்த்தியும் தாழ்த்தியும் ​எழுதுகிறார்கள் என்​றே நம்புகி​றேன்.//

    அருமை. இவர்கள் வரலாற்று நாயகர்களை பற்றி இவ்வாறு புத்தகம் எழுதுவதற்கு பதில், தலைவர் ‘கலைஞரை’ புகழ்ந்து எதாவது எழுதலாம்.

    சும்மா, இணையத்திலும், wikipedia – விலும் படித்து விட்டு புத்தகம் எழுதுகிறார்கள் என நினைக்க தோன்றுகிறது.

  4. //பார்க்க சினிமா, படிக்க புத்தகம், ​கொறிக்க பாப்கார்ன்//

    சே! அவசரமாக படிக்கும் போது கடைசி வார்த்தையை வேறு மாதிரி படிச்சுட்டேன். எல்லாம் தமிழ்மனம் தந்த ப்ராக்டீஸ்… 😉

பின்னூட்டமொன்றை இடுக